வீரன் அழகு முத்துக்கோன்

(இந்திய சுந்திரப் போராட்டத்தில் மடிந்த முதல் தலைவன்)


தமிழர் விடுதலைக்கான முதல் வித்து

இந்திய தமிழர்களின் வீரச் சொத்து

யாதவ குல மாயோனின் வழிவந்த முத்து - அவன்

மன தீரத்தை எடுத்து உன் மனதில் ஒற்று!


வெள்ளையரை வெளியேற்ற உறுதி பூண்டான்

வேகமான வாள் வீச்சால் வீரம் கொண்டான்

வெகுளியான மக்களுக்கு துணிவு தந்தான்

கப்பம் கட்ட மாட்டேன் என்றே சபதம் எடுத்தான்

சவுக்கடிக்கு பயந்தவர் கைகளில் வாளை கொடுத்தான்!


பெரும்படை கொண்டே வெள்ளையர் வந்தனர்

பீரங்கி கொண்டே சுற்றி வளைத்தனர்

வேட்டு முழக்கஙகள் விண்ணை துளைத்தன -தமிழ்

வீர மறவர்கள் குருதி மண்ணை நனைத்தது!


விடுதலை கேட்டதால் 500 மறவர்கள் கைகளை இழந்தனர்

துடித்து துடித்து போராடி அவர்கள் உயிரையும் துறந்தனர்

நண்பர்கள் இறந்தும் சோரவில்லை சேர்வைக்காரன்

மன்னிபுக்கேள் என்றவரை பார்த்து எரிமலை ஆன தீரன்!


பீரங்கி அவன் உடலை பதம் பார்த்தது!

காற்று அவன் உயிரை கரைத்து சென்றது

மண் அவன் வீரத்தை வாங்கி கொண்டது -போராட

மறவர் பலரை காலம் தோறும் தோற்றுவித்தது


புலித்தேவன் என்றும் மருது பாண்டியர் என்றும்

கட்டபொம்மு என்றும் வேலு நாச்சி என்றும்

சின்னமலை என்றும் திருப்பூர் குமரன் என்றும்

பின்னர் பல வீரர்கள் தோன்றினர், -அழகு

முத்துக்கோன் கனவை அவர்கள் காத்தனர்!

Post a Comment

0 Comments